நயன்தாராவின் அதனை பிடித்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வெளியிட்ட வீடியோ! தீயாக பரவும் பதிவு!

Photo of author

By CineDesk

நயன்தாராவின் அதனை பிடித்துக்கொண்டு விக்னேஷ்சிவன் வெளியிட்ட வீடியோ! தீயாக பரவும் பதிவு!

நயன்தாரா சில வருடங்களாக அதிக புகழ் பெற்று சினிமா துறையில் விளங்கி வருகிறார்.இவர் முதலில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் சேர்ந்து நடித்தார்.இந்தப்படம் பெருமளவு வெற்றியடைந்தது.அந்த படத்திலேயே இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வைக்கப்பட்டது.அதனையடுத்து சினிமா வட்டாரங்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறினர்.பிறகு இருவரும் அவர்கள் காதலிப்பதை உறுதி செய்தனர்.சில ஆண்டுகளிலே அவர்களின் காதல் முறிந்தது.அதனையடுத்து வில்லு படத்தில் விஜயுடன் நடித்தார்.

அந்த படத்திற்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றினார்.அந்த சமயத்தில் பிரபுதேவா மற்றும் நயன்தார இருவருக்கிடையே காதல் மலர்ந்தது.பிரபுதேவா கல்யாணம் ஆனவர் என அறிந்தும் நயன்தார காதலித்து வந்தார்.இதனை அறிந்த பிரபுதேவா மனைவி நீதிமன்றத்தை நாடி நீதி கேட்க ஆரம்பித்தார்.இது மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.அதனையடுத்து சில ஆண்டுகளாக நடிப்பதிலிருந்து பின்தங்கி இருந்தார்.மீண்டும் ஸ்ரீ ராம ஜெயம் படம் மூலம் திரைக்கு வந்தார்.சில ஆண்டுகள் கழித்து வந்தாலும் இவருக்கு அந்த படத்திலேயே பெரும் வரவேற்ப்பு கிடைத்தது.

அதனையடுத்து அவர் நடித்த அனைத்து படங்களும் அவருக்கு வெற்றியே கிடைத்தது.நானும் ரௌடி தான் படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார்.இவர்களுக்கு உறவினர்கள் மத்தியில் நிச்சயமும் முடிந்துவிட்டது.நிச்சயம் முடிந்ததாக நயன்தாராவே ஓர் பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தார மற்றும் சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளிவர உள்ளது.மேலும் நயன்தாராவுடன் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

அதேபோல தற்போது அவர்,நயன்தாராவின் கையை பிடித்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அந்த வீடியோவிற்கு பூவுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம் என்ற பாடலையும் அந்த வீடியோவின் பேக் ரவுண்டு பாடலாக வைத்திருந்தார்.இதன் மூலம் நயன்தாராஓர் அதிசயம் என கூறுவது போல உள்ளது.தற்பொழுது வீடு கட்டும் பணி தீவீரமாக நடந்து வருகிறது.அந்த வீடு கட்டும் பணி முடிவடைந்த பிறகு இருவருக்கும் திருமணம் நடக்கும் என பலர் கூறி வருகின்றனர்.