ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்!

0
263

ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்!

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அதிக சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்காக நகைச்சுவை நடிகராக நடிக்க இருந்த பல படங்களை இழந்தார். ஆனால் இன்னும் விடுதலை திரைப்படம் முடியவில்லை. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. எப்போது ரிலீஸ் ஆகும் என்றும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கினார் வெற்றிமாறன். அதனால் ஷுட்டிங் மேலும் பல மாதங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது ஒரு வழியாக விடுதலை படத்தின் இரண்டு பாகங்களின் ஷுட்டிங்கையும் வெற்றிமாறன் இன்றோடு முடிக்கிறார். படத்துக்கு பூசணிக்காய் உடைக்கபட உள்ளது. இதனால் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆன சூரி, விஜய் சேதுபதி முதல் தயாரிப்பாளர் வரை அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதையடுத்து முதல் பாகம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

Previous articleநயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!
Next articleபூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்!