வீணாக வாய் விட்டு ரஜினி ரசிகர்களிடையே சிக்கிய விக்னேஷ் சிவன்!!

Photo of author

By Gayathri

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகாக உயிர் உலகம் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

அமைதியாகவும் அன்பாகவும் சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்வில் தற்போது புயல் வீசுகிறது என்று கூறும் அளவு பிரச்சனைகள் மலைபோல் உருவாகி கொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணமாக இவர்களுடைய Beyond the fairy tale என்ற டாக்குமெண்டரியை உள்ளது.

இந்த டாக்குமென்ட்ரி வெளியிடுவதற்கு பல பிரச்சனைகள் உண்டாகினர். எனினும் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த டாகுமென்றியானது தற்பொழுது வெளியாகியுள்ளது. எனினும் பிரச்சினைகள் ஓய்ந்த பாடு இல்லை. மேலும் இந்த டாக்குமெண்டரியில் பல திரை பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பேசிய வீடியோ காட்சிகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாக்குமெண்டரியில் விக்னேஷ் சிவன் அவர்கள் பேசிய விதம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. விக்னேஷ் சிவன் பேசிய வீடியோவில் இடம் பெற்றவையாவது :-

நானும் நயன்தாராவும் காதலிப்பது தெரிந்து நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கா என கலாய்த்தார்கள்.ஏன் அந்த நாய்க்கு பிரியாணி கிடைச்சா என்ன. ஒரு சாதாரண கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகலையா, அதை மாதிரி தான் நான் நயன்தாராவை கல்யாணம் பண்ணது என பேசி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் பலவிதமான கடினமான சூழ்நிலைகளைக் கடந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். ஆனால் இங்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவை இரண்டிற்கும் எந்த விதத்தில் சம்பந்தம் என்பது இன்று வரை யாருக்கும் விளங்காத புதிராகவே உள்ளது. ஆனால் விக்னேஷ் சிவன் அவர்கள் இதனை சம்பந்தப்படுத்தி பேசி இருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.