இன்று ஒரே நாளில் விஜய், தனுஷ் படங்களின் அறிவிப்பு!

Photo of author

By CineDesk

இன்று ஒரே நாளில் விஜய், தனுஷ் படங்களின் அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகில் விஜய் மற்றும் தனுஷ் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் அதே போல் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த ஒரு மணி நேர இடைவெளியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

https://twitter.com/SathyaJyothi_/status/1200681517434884097

முதலில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அந்த படத்தின் குழுவினர்களும் அதேபோல் விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளிவரும் என்றும் அந்த படத்தின் குழுவினர்களும் அறிவித்துள்ளனர்

அடுத்தடுத்து இரண்டு பெரிய மாஸ் நடிகர்களின் படங்களின் அறிவிப்புகள் இன்று வெளிவரவுள்ளதை அடுத்து இன்று மாலைக்கு மேல் டுவிட்டர் என்ன பாடுபடும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை

https://twitter.com/XBFilmCreators/status/1200728068186243072

மேலும் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படலாம் என கருதப்படுகிறது

அதேபோல் ’தளபதி 64’ படத்தின் டைட்டில் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வருவதை அடுத்து அந்த செய்தி உறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.