விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார்… லோகேஷ் போடும் ஸ்கெட்ச்
பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சமந்தா நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.