விஜய் மற்றும் சீமான் கட்சிக்கு செல்கிறார்கள் இளைஞர்கள்! கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி! 

Photo of author

By Rupa

விஜய் மற்றும் சீமான் கட்சிக்கு செல்கிறார்கள் இளைஞர்கள்! கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி!
தமிழ்நாடு மாநில காங்கரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள் இளைஞர்கள் அனைவரும் நம் கட்சியை விட விஜய் கட்சிக்கும் சீமான் கட்சிக்கும் செல்கின்றதாக பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்திக்கும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை மாநிலத்தலைவர் செல்வ பெருந்தகை அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் மாஜி திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், எம்பி கார்த்தி சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள் இளைஞர்கள் எல்லாரும் விஜய் மற்றும் சீமான் கட்சிக்கு செல்வதாக பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அந்த பொதுக்கூட்டத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள் “தமிழ்நாட்டை பொறுத்தவரை நாம் கூட்டணிக் வைத்ததால் தான் வெற்றி பெற்றோம். அதனால் நம்முடைய கட்சி பலமாக இல்லை என்று நான் கூறவில்லை. நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமராக ராகுல் காந்தி அவர்கள் வர வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள்.
நம்முடைய கட்சி ஒரு காலத்தில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்பொழுது காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டதாக அனைவரும் கூறுகின்றனர். புதிதாக தோன்றும் கட்சிகள் கூட நம்மை தொட்டுவிடும் நிலையில் இருக்கின்றது.
நம்முடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் எம்பிகள் மட்டும் போதாது. எம்.எல்.ஏ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேவை. அதிக அளவில் எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் தான் அந்த கட்சி வளர்ச்சி அடையும்.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்றது என்றாலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி நடத்த முடியவில்லை. தேவைக்கு பயன்படுத்துவது போல தேர்தலுக்கு மட்டும் நம்மை பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அமைந்ததும் நம்மை கைவிட்டு விடுகிறார்கள்.
ஆனால் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள் போன்ற கட்சிகள் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை பற்றி பேசி தங்களுடைய தனித் தன்மையை வெளிக்காட்டுகிறார்கள். அதே போல நாமும் மக்களின் தேவையை கேட்டு நம்முடைய கருத்தை பதிவு செய்தால் தான் மக்களும் நம்மை பார்ப்பார்கள்.
இன்றைய காலத்தில் இளைஞர்களை ஈர்க்க பல கட்சிகள் தோன்றுகின்றது. அந்த வகையில் இளைஞர்கள் அனைவரும் நடிகர் விஜய் உருவாக்கிய கட்சிக்கும் சீமான் கட்சிக்கும் செல்கின்றனர். எனவே காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் அதிகம் வர வேண்டும்” என்று கூறினார்.