இன்று முதல் படப்பிடிப்பு வேலையை தொடங்கும் விஜய் ஆண்டனி! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு!
தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கினார்.மேலும் இந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது.அதனை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படம் தயாராகி வருகின்றது.அதற்கான படப்பிடிப்பு கடந்த வாரங்களாக மலேசியாவில் நடைபெறுகின்றது.
மேலும் லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பின் பொழுது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார்.அப்போது அவருக்கு படப்பிடிப்பு தளத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது.அதனையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் இவருக்கு இந்த பிச்சைக்காரன் 2 விஜய் ஆண்டனியின் புரொடக்ஷன் மூலம் தயாரிப்பதோடு இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றார்.
குறிப்பாக இந்த படத்தின் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.அவருக்கு தாடை மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டது அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை முடிவடைந்த நிலையில் டுவிட்டரில் அன்பு இதயங்களே நான் 90 சதவீதம் குணம் அடைந்து விட்டேன் உடைந்த தாடை மற்றும் மூக்கு தற்போது ஒன்றாக சேர்ந்துவிட்டது.இந்த அன்பிற்கு நன்றி என கூறியுள்ளார்.
https://twitter.com/vijayantony/status/1621028015391248384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1621028015391248384%7Ctwgr%5E4fed4813e43aef9e5543014a0f9ed96dd0464f47%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvijay-antony-about-his-health-1675320082
நான் தற்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன் இதற்கு காரணம் நீங்கள் தான். இன்று முதல் பிச்சைக்காரன் படத்தின் வேலையை தொடங்குகிறேன் என கூறியுள்ளார்.