இதை விஜய் என்னைத்தான் செய்ய சொன்னார்.. ஆனால் மாறிப்போச்சு – பார்த்திபன் ஓபன் டாக்!!

0
249
Vijay asked me to do this.. but it changed - Parthiban Open Talk!!
Vijay asked me to do this.. but it changed - Parthiban Open Talk!!

 

இதை விஜய் என்னைத்தான் செய்ய சொன்னார்.. ஆனால் மாறிப்போச்சு – பார்த்திபன் ஓபன் டாக்!!

திரைப்பட இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அவர் முதன் முதலில் வேடிக்கை மனிதர்கள் படத்தின் மூலம் துணை இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த தாவணி கனவுகள் படத்தில் துணை இயக்குனராகவும் மற்றும் நடிகராகவும் பணி செய்தார்.

அதன் பின் அவர் முதன் முதலில் இயக்கி நடித்த திரப்படம் புதிய பாதை. இப்படம் 1989ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது மேலும் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவர் சமீபத்தில் ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருப்பார் இப்படம் நெடுகிலும் இவர் ஒருவர் மட்டுமே வருவார் இது ஆசியா புக் ஆப் ரெகார்டில் சாதனை செய்துள்ளது. இதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

பார்த்திபன் அவர்கள் 70 திரைப்படங்களில் நடித்துள்ளார் மற்றும் 15 படங்களை இயக்கியுள்ளார் அது மட்டுமில்லாமல் 13 படங்களை தயாரித்துள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் புது முயற்சிகளை மேற்கொள்பவர்.

சமீபத்தில் இவர் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 3இடியட்ஸ் இதில் அமீர் கான்,மாதவன் போன்றோர்கள் நடித்திருப்பார்கள். இதை தமிழில் விஜய் நடிக்க நண்பன் என ரீமேக் செய்ய திட்டமிட்டனர். அப்போது இப்படத்தை இயக்க பார்த்திபனிடம் விஜய் அவர்களே கேட்டுக்கொண்டதாகவும் அதன் பின் சில பேர் இயக்குனர் ஷங்கர் அவர்களின் பெயரை பரிந்துரை செய்ய அப்படம் அப்படியே கைமாறியதாக கூறினார். பின்பு விஜய் அவர்களின் தந்தை SAC அவர்கள் இப்படத்தை நீங்கள் இயக்கியிருந்தால் உங்கள் படங்களை போன்று வித்தியாசமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

தற்போது அவர் இயக்கத்தில் டீன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்திற்கு முதல் சில நாட்களுக்கு மட்டும் டிக்கெட் விலை ரூ.100
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இது ஏழைகளுக்கு பயன்படும் வகையிலிருக்குமென்றும் இதனால் தனக்கு எந்த நஷ்டமும் இல்லையென்றும் பார்த்திபன் அவர்கள் கூறியிருக்கிறார்.

Previous articleஇதெல்லாம் சரியில்லை மாத்திக்கோங்க.. அஜித்தின் கறார் பேச்சு!! திமுக வெளியிட்ட அதிரடி அறிக்கை!! 
Next articleநடிகை துஷாரா விஜயனின் திடீர் முடிவு! சினிமாவிலிருந்து விலகுகிறாரா?