TVK: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதிலும் திமுக மட்டும் தான் தனது பழைய கூட்டணியை அப்படியே வைத்துள்ளது. மேற்கொண்டு பாஜக பாமக அதிமுக என மாற்றுக் காட்சியினர் தற்போது வரை கூட்டணி குறித்து குழப்பத்தில் தான் உள்ளனர்.
இதில் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் அது சட்டமன்ற தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறி வருவதால் அதிமுக இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் இறுதிவரை கூட்டணி என்பது சற்று கடினம் தான் என கூறுகின்றனர். அதே சமயம் தேமுதிக பாமக இரு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாம்.
அதிமுகவுடன் தேமுதிக கைகோர்த்திருந்த நிலையில் எம்பி சீட் வழங்காததால் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேசப்படவில்லை. இதனால் ஆட்சியில் பங்கு தரும் விஜய்யுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோலத் தான் பாமகவும் விஜய்யுடன் சேர உள்ளதாம். முன்னதாகவே கட்சிக்குள் தலைமை பதவிக்கு சண்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ராமதாஸுக்கு அனைத்து அதிகாரமும் செல்லும் பட்சத்தில் அவர் விஜய்யுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி பல நாட்களாக ஸ்டாலினுடன் மன கசப்பிலிருக்கும் திருமா-வுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் உள்ளாராம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பாமக விசிக என அனைவருடனும் கூட்டணி வைத்து ஸ்டாலினை எதிர்க்க போவதாக கூறுகின்றனர்.