கையில் காயத்துடன் வாக்களிக்க வந்த விஜய்…. என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!!

கையில் காயத்துடன் வாக்களிக்க வந்த விஜய்.. என்னாச்சு என பதறிய ரசிகர்கள்!!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் விஜய் அவரின் ஜனநாயக கடமையை ஆற்றுவாரா? ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க தமிழகம் வருவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் இன்று தமிழகம் வந்து அவரின் வாக்கைப்பதிவு செய்துள்ளார். வழக்கமாக ரஷ்யாவில் இருந்து துபாய் வந்துதான் சென்னை வரமுடியும். ஆனால் தற்போது துபாயில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் மாஸ்கோ வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த முறை போல சைக்கிளில் வந்து வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ரசிகர்கள் புடைசூழ காரில் வந்து நீலாங்கரை வாக்குச்சாவடியில் அவரின் வாக்கை பதிவு செய்தார். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதற்கிடையில் விஜய் கையில் காயம் இருப்பதை கண்டு அவரின் ரசிகர்கள் தலைவருக்கு என்னாச்சு என கேட்டு வருகிறார்கள்.

கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக பைக் சேசிங் காட்சி ஒன்று ரஷ்யாவில் படமாக்கப்பட்டதாம். அப்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் விஜய்யின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் விஜய் பார்க்கவும் மிகவும் சோர்வாக காணப்படுவதாக கூறுகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.