இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்

Photo of author

By Vinoth

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்

Vinoth

இவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் நேற்று முன் தினம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியானது.

சமீபகாலத்தில் தென்னிந்தியாவின் வளரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவாராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார். இந்நிலையில்தான் அவரின் லைகர் திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பூரி ஜகந்நாத் இயக்கத்தில் லைகர் ட நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸானது.

ஆனால் முதல் நாள் முதல் காட்சியிலேயே மோசமான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்தது. ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் கழுவி ஊற்றும் ஒரு திரைப்படமாக அமைந்தது லைகர். ஆனால் முதல் நாள் படத்தின் வசூல் பிரம்மிக்க வைக்கும் விதமாக உள்ளது. முதல்நாளில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 33.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.