அஜித்துக்காக இதை விஜய் தினமும் செய்தார்.. இது தான் அவர்களின் உறவு – சோபனா ஓபன் டாக்!!

0
11
Vijay did this everyday for Ajith.. This is their relationship - Chopana Open Talk!!
Vijay did this everyday for Ajith.. This is their relationship - Chopana Open Talk!!

தமிழ் சினிமாவின் தல மற்றும் தளபதியாக வளம் வருபவர்கள் அஜித், விஜய். இவங்க ரெண்டு பேரின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இவர்களின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அதேபோல ஒரே நாட்களில் வெளியாகும் இவர்களின் படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிநடை போடும்.

சினிமாவை தாண்டி விஜய் மற்றும் அஜித்துக்கு நடுவில் மிகப்பெரிய நட்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. இதை அவர்களே பல மேடைகளிலும், பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் விஜய் மற்றும் அஜித்தின் நட்பு பற்றி விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து தனது தந்தை சந்திரசேகரின் படங்களில் நடித்து வந்தார். ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் விஜய் சந்திரசேகரை தாண்டி வேறொரு இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பின்போது விஜய் தினமும் அஜித்திற்கும் சேர்த்து தனது வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாராம். அந்த அளவுக்கு அஜித் மீது மிகுந்த நட்புடன் அன்பில் இருந்தார் விஜய் என பேட்டி கொடுத்துள்ளார் சோபா.

Previous articleயுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!
Next articleரஜினிகாந்தே எனக்கு ஒரு ஆள் கிடையாது! உங்க அண்ணன் என்ன பெரிய கொம்பனா? மீண்டும் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!