Breaking News

அம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்.

பள்ளி தலைமை ஆசிரியருக்கு அம்பேத்கர் உருவப்படத்தை வழங்கி சால்வை அணிவித்து கௌரவ படுத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள நடுநிலை பள்ளியில் படித்து வரும் 900 மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ சி ஆர் சரவணன் தலைமையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள மாணவர்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கியுள்ளனர்.

இது மட்டும் இன்றி பள்ளி தலைமை ஆசிரியருக்கு சால்வை அணிவித்து அம்பேத்கர் உருவப்படம் கொடுத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

நாளை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அதை விமர்சையாக கொண்டாடப் போவதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பள்ளி மாணவர்களுக்கு ஜூஸ் வழங்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் நாளை காலை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு எங்கெல்லாம் அம்பேத்கர் சிலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் விஜய் ரசிகர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

முதல் முறையாக நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுவது அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.