TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், பாஜகவின் ஆலோசனைப்படி தான் தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறவிட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட திட்டத்தை கையில் எடுத்து உள்ளார்களாம். இவர்களுக்கு எதிரான எதிரியை உருவாக்குவது போல் கொண்டு வந்து திமுக கூட்டணியை உடைக்கவே விஜய்யை கட்சி ஆரம்பிக்க கூறி டெல்லி தலைமை ஆலோசனை செய்ததாம்.
இதனால் தான் விஜய் பேரிடர் சமயங்களில் பெரும்பாலான ஈடுபாடின்றி இருந்துள்ளார். இதனாலேயே அவருக்கு ஒர்க் பிரமோ செய்யும் அரசியல்வாதி என்ற அடைமொழியும் இணைந்துள்ளது. அதேபோல எடப்பாடியை கூட்டணிக்கு அழைப்பது போல் அழைத்து பின்பு பாஜகவில் இணைக்க வைத்ததும் இவர் வேலைதான் எனக் கூறுகின்றனர். முதலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிமுகவிற்கும் பேச்சுவார்த்தை நடந்த போது சரி பாதி தொகுதி பிரிக்க வேண்டும், இரண்டு ஆண்டுகள் நாங்கள்தான் ஆட்சியில் முதலாளாக ஆளுவோம் என்று பல வரைமுறைகளை விதித்துள்ளார்.
இவையனைத்தும் எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை. இந்த காரணத்தினாலேயே மீண்டும் பாஜகவை நாடவேண்டி சூழல் வந்தது. இதே போல கூடிய விரைவில் ஆளும் கட்சியின் கூட்டணியை உடைக்க விஜய்க்கு ட்ரெயினிங் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜகவின் சைலண்ட் அரசியல்வாதியாக விஜய் இருப்பதாகவும் கூறுகின்றனர். நாளடைவில் சரத்குமாரை போல இவரும் தனது அரசியல் ஷட்டரை மூடிவிட்டு பாஜகவுடன் இணைந்துவிடுவார் என்று கூறுகின்றனர்.