TVK: தமிழக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். கடந்த ஆண்டு இதே நாளில் அவரது இல்லத்திற்கு பக்கத்திலேயே படு கொலை செய்யப்பட்டார். மேற்கொண்டு இது ரீதியாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது வரை இந்த வழக்கானது நடைபெற்ற வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் அவரது மனைவிக்கு மாநில பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
பின்பு கட்சிக்குள்ளேயே சில மனக்கசப்புகள் ஏற்பட அவர் விலகிக் கொண்டார். இன்று அவர் நினைவு தினத்தையொட்டி புதிய கட்சி ஒன்று தொடங்கி உள்ளார். இதில் புதிய சிக்கல் என்னவென்றால் இவர் தொடங்கிய கட்சியின் சின்னமும் யானை தான். தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தில் இரு யானைகள் இருந்தபோதே பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையம் வரை சென்றது. ஆனால் கட்சிக்கொடி மற்றும் அதில் உள்ள சின்னங்கள் எதற்கும் தேர்தல் ஆணையம் பொறுப்பாகாது.
அதற்கு அங்கீகாரமும் வழங்குவதில்லை என தெரிவித்து விட்டனர். தேர்தல் நேரத்தில் சமயத்தில் ஒரு கட்சியின் வாக்கு சின்னத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டது. அத்தோடு விடாமல் மேற்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி, உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றமும், உங்களது கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது.
வாக்காளர்களை குழப்பம் வகையில் ஏதும் இல்லை என்று நீதிபதி கூறிவிட்டார். இருப்பினும் தங்கள் தரப்பில் மேற்கொண்டு ஆவணங்கள் சமர்ப்பிக்க பகுஜன் சமாஜ் கட்சியானது மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கே நிலுவையில் இருக்கும் பட்சத்தில் தற்போது ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடங்கிய சின்னத்திலும் யானை உள்ளது.
தமிழகத்தில் தற்போது மூன்றாவது கட்சியாக யானை சின்னத்திலேயே களம் இறங்கி இருப்பது சற்று மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.