நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான விஜய் அவர்கள் கடைசியாக ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெறக்கூடிய பாடல் ஒன்று விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் லிப்லாக் காட்சி ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நடித்துள்ளனர். ஜனநாயகம் திரைப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும். பீஸ்ட் திரைப்படத்திற்கு பின்னர் பூஜா ஹெக்டே அவர்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்த வருகிறார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தேவா திரைப்படத்தில் சாகித் கபூர் மற்றும் இவருடைய லிப்லாக் காட்சி ஆனது ரசிகர்களிடையே வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு லிப் லாக் காட்சி வைக்கப்பட்டிருப்பதை தெரிவித்த பொழுது இந்த காட்சியில் நடிக்க பூஜா ஹெக்டே அவர்கள் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும் குறிப்பாக படத்திற்கு தேவை என்றால் இது போன்ற காட்சிகளில் நடிக்கலாம் என்றும் கவர்ச்சியை சேர்ப்பதற்காக இது போன்ற காட்சிகளில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்திருக்கிறாராம். இந்த திரைப்படம் ஆனது வெளிவந்த பின்பு தான் இந்த செய்தியில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை நம்மால் அறிய முடியும்.