அதிமுக தவெக கூட்டணி உறுதி.. மேடையில் சூசகமாக சொன்ன விஜய்!! பாஜக வுக்கு விழுந்த பெரும் இடி!!

Photo of author

By Rupa

அதிமுக தவெக கூட்டணி உறுதி.. மேடையில் சூசகமாக சொன்ன விஜய்!! பாஜக வுக்கு விழுந்த பெரும் இடி!!

Rupa

vijay-indirect-speech-about-aiadmk-alliance

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதற் பொதுக்குழு கூட்டமானது சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் தாய் தந்தையர் என தொடங்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கு கொண்டனர். குறிப்பாக விஜய், இந்த பொதுக்குழு கூட்டத்தில் நேரடியாகவே திமுகவையும் பாஜகவையும் தாக்கி பேசியுள்ளார். கொள்ளையடிக்கவே ரகசிய கூட்டணியில் பாஜகவை பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்கொண்டு இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து பேசுவார் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் அது ரீதியாக அவர் ஏதும் பேசவில்லை. இதற்கு மாறாக, நாங்கள் யாரை நேரடியாக எதிர்க்கிறோம் என்பதை பெயர் சொல்வதில்லை என்று ஒரு கும்பல் கூறுகிறது. அதற்கு மாறாக தான் நாங்கள் மத்திய ஆட்சியில் ஆள்பவர்கள், மாநிலத்தில் ஆளுபவர்கள் எனக் கூறுகிறோம்.

மத்தியில் யார் ஆளுகிறார்கள் என்று தெரியாதா? மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் அதிமுக ஆட்சகியுமா நடக்கிறது. பெயர் சொல்லாததற்கு பயம் என்றும் விமர்சனம் வைக்கிறார்கள். இதோ இப்போது நேரடியாகவே சொல்கிறேன் என பேசினார். அதே போல மும்மொழிக் கொள்ளையை  எதிர்த்தும் பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்கள் கொண்டு வரும் போதே தெரியும் , தமிழ்நாட்டை மிகவும் கேர்புல்லாக காயுளுங்கள் என மோடிக்கு நேரடியாகவே சவால் விட்டுள்ளார். முன்னதாகேவ தமிழ்நாடு தன்னி காட்டியுள்ளது என்றும் எச்சரிக்கையும் விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் பாஜக வை எதிர்த்த ஜெயலலிதா அம்மா செய்த செயல் தான் என்றும் , அதை வைத்து தான் இவர் அப்படி பேசினார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேற்கொண்டு புரட்சி தலைவியை சுட்டிக்காட்டும் நோக்கில் விஜய் மறைமுக எச்சரிக்கையை கொடுத்திருப்பது நாளடைவில் அதிமுக – வுடன் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது.