நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து அதற்கான முழு செயல்பாட்டிலும் இறங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அவர்களும் தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதனை இந்த பதிவில் விரிவாக காண்போம்.
புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் அவர்கள், தனுஷ்- நயன்தாரா மோதல் இந்தியா கிரிக்கெட் மேட்ச் போன்று சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தான அதனை ஒரு ரசிகனாக நின்று ரசிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சினிமா துறையில் தொடர்ந்து வரும் விவாகரத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது என்றும், ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது, அவர் நல்ல மனிதர் என மனைவியே சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார் பார்த்திபன்.தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது என்றும், ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது, அவர் நல்ல மனிதர் என மனைவியே சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார் நடிகர் பார்த்திபன்.
அதனைத் தொடர்ந்து, பிரமாதமான அரசியல் எழுச்சி பெற்றுள்ள விஜய், திமுகவை எதிர்ப்பதுதான் சரி என்றும் பார்த்திபன் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.அதற்கு உதாரணம் கொடுத்த பார்த்திபன், எம்ஜிஆர் ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியலில் வென்றார். ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். எனவே விஜய் திமுகவை எதிர்ப்பதில் தவறு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேசி இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு. அரசியல் கட்சித் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால், ஒருநாள் கட்சியை ஆரம்பிப்பேன் என்றும் ஆனால், 2026 தேர்தலில் அல்ல என்றும் வெளிப்படுத்தி இருக்கிறார்.