விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராடினார்! கூறும் பிரபல நடிகர்!!

Photo of author

By Parthipan K

விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராடினார்! கூறும் பிரபல நடிகர்!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரின் தனித்துவமான இசை மற்றும் பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தினார். பின்னர் நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசை அமைப்பாளராக இருந்தபோதே ஹீரோவாக அறிமுகமாகி தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்தார். இவரின் நடிப்பில் கடைசியாக கோடியில் ஒருவன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

விஜய் ஆண்டனி, இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான படங்களான வேட்டைக்காரன் மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்திருந்தார். விஜய் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

விஜய்க்கு மிக நெருங்கிய நண்பராகவும் விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட விஜய் ஆண்டனி ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில், விஜய் ஆண்டனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தன்னுடைய படத்தை விஜய் பார்த்துவிட்டு என்னை பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் சலீம். சலீம் திரைப்படத்தை பார்த்த நடிகர் விஜய் படத்தை பார்த்துவிட்டு தன்னை வெகுவாக பாராட்டினார் என சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.