“திரைத்துறையில் விஜய் மகன்”.. “முதல் பட மோஷன் போஸ்டர் வெளியீடு”..

0
440
"Vijay Magan on Screen".. "First Movie Motion Poster Released"..
"Vijay Magan on Screen".. "First Movie Motion Poster Released"..

நடிகர் விஜய் அவர்களின் மகன் தான் “ஜேசன் சஞ்சய்”, இவர் தமிழ் திரையுலகில் தனது காலடியை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு “லைக்கா” தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பின்னர் இவர் இயக்க இருந்த “முதல் படம்” கைவிடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், ஜேசன் சஞ்சய் அவர்களின் படம் கைவிடப்படவில்லை கண்டிப்பாக படப்பிடிப்பு நடக்கும் என்றும், நடிகர்களின் தேர்வில் பிசியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கதாநாயகனாக “துருவ் விக்ரம், விஜய் சேதுபதி, சூரி” என பல ஹீரோக்கள் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இவர்கள் யாரும் செட் ஆகவில்லை என்பதால், தற்போது “சந்தீப் கிஷன்” அவர்கள், “ஜேசன் சஞ்சய்” இயக்கும் முதல் படத்தில் நடிக்க இருப்பதாக, நடிகர் “பாவா லக்ஷ்மணன்” உறுதிப்பட தெரிவித்திருந்தார். இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படாமல் இருந்தது.

தற்போது இவரின் முதல் படத்தின் “மோஷன் போஸ்டர்” வெளியாகியுள்ளது. இயக்குனராக அறிமுகமான, “ஜேசன் சஞ்சையின் ” முதல் படத்தை “லைகா” நிறுவனம் தயாரிக்கிறது. இதில் “பாவா லக்ஷ்மணன்” கூறியதுபோல தெலுங்கு நடிகர் “சந்தீப் கிஷன்” நடிக்கிறார். இவர், தமிழில் சில மாதங்களுக்கு முன் வெளியான “ராயன்” படத்தில் “தனுஷின் தம்பியாக” நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்காக ஜேசன் சஞ்சய் “1 வருடமாக” பொறுமையாக காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இவர் தன் முதல் படத்திலேயே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article“அஜித் வைத்திருக்கும் நம்பிக்கை”.. “அதனால் எங்களுக்கு ஏற்படும் பிரஷர்”..
Next article1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரையாண்டு கால அட்டவணை வெளியிட்டு!!