விஜய் மல்லையாவின் சொத்துக்கள் – வங்கிகளுக்கு தர ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Photo of author

By Kowsalya

 

அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகளின் குழுமத்திற்கு தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

9000 கோடி ரூபாய் கடனாக பல வங்கிகளில் வாங்கி அதை நிலுவையில் வைத்துள்ளார் விஜய் மல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கட்ட முடியாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பித்துச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கிய 17 வங்கி கட்டமைப்புகள் அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. கடனை கட்டமுடியாமல் அவர் மற்ற நாடுகள் தப்பிச் சென்றதால் அவருடைய பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்தது.

 

அதில் சில குறிப்பிட்ட சொத்துக்களை வங்கி குழுமத்திற்கு திருப்பி தர மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று வேறு சில சொத்துக்களை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த உத்தரவை எதிர்த்த விஜய் மல்லையாவின் எதிர் மனுவையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.