விஜய்க்கு ஜோடியாகிறாரா திரிஷா… பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி?

Photo of author

By Vinoth

விஜய்க்கு ஜோடியாகிறாரா திரிஷா… பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி?

நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய், தற்போது நடித்து வரும் வாரிசு படத்துக்குப் பிறகு  மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதுபோல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சமந்தா நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய வேடத்தில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் குருவி படத்துக்கு பின்னர் 13 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இந்த படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். இதற்கு முன்பாக கில்லி, திருப்பாச்சி மற்றும் ஆதி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.