விஜய்- லோகேஷ் படத்தில் வில்லன் கிடையாது…. வில்லியாக மாஸ் காட்டப்போகும் நடிகை

0
79

விஜய்- லோகேஷ் படத்தில் வில்லன் கிடையாது…. வில்லியாக மாஸ் காட்டப்போகும் நடிகை

விக்ரம் வெற்றிக்குப் பிறகு இப்போது விஜய் 67 படத்தின் திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ்.

பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் தயாரிப்பாளரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதற்கிடையில் இந்த படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பாடல்கள் கிடையாது என்றும் அதுபோல கதாநாயகி இல்லை என்றும் சொல்லப்படுகிரது.

இந்நிலையில் படத்தில் வில்லியாக பிரபல நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமந்தா ஏற்கனவே பேமிலி மேன் சிசன் 2 வில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.