”விக்ரம் வெற்றியைக் கொண்டாடி விஜய் படத்தின் வேலையை தொடங்கிவிட்டேன்…” லோகேஷ் அப்டேட்!

Photo of author

By Vinoth

”விக்ரம் வெற்றியைக் கொண்டாடி விஜய் படத்தின் வேலையை தொடங்கிவிட்டேன்…” லோகேஷ் அப்டேட்!

Vinoth

Updated on:

”விக்ரம் வெற்றியைக் கொண்டாடி விஜய் படத்தின் வேலையை தொடங்கிவிட்டேன்…” லோகேஷ் அப்டேட்!

பீஸ்ட் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் தெலுங்கு வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் தயாரிப்பாளரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இதற்கிடையில் இந்த படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பாடல்கள் கிடையாது என்றும் அதுபோல கதாநாயகி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லியாக பிரபல நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷிடம் விஜய் படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்பார்கள். என் தரப்பில் நான் இப்போது 10 நாட்கள் எழுத்து வேலையை ஆரம்பித்துள்ளேன். இவ்ளோ நாள் காத்திருந்தீர்கள். இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.