விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

பழைய படங்களில் முன்னணி வில்லன்களில் பிரபலமாக வலம் வந்ததில் கசான் கானும் ஒருவர். இவர் வில்லனாக நடித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.

இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் முதன்முதலாக செந்தமிழ் பாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

அதுமட்டுமின்றி இவர் விஜய் உடன் பிரியமானவளே சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை அடுத்து அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்திற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அந்த வகையில் தமிழ் மொழியை தவிர்த்து கன்னட மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். இவரது அபார நடிப்பால் ஒரு சில காலங்களில் கால்ஷீட் கூட கிடைக்காமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழம்பெறும் வில்லன் நடிகர் ஆன இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திரை உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருடைய உயிரிழப்பிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.