சற்றுமுன் தவெக விழா மேடையில் விஜய்!!! தொண்டர்கள் கொண்டாட்டம்!!

Photo of author

By Gayathri

சற்றுமுன் தவெக விழா மேடையில் விஜய்!!! தொண்டர்கள் கொண்டாட்டம்!!

Gayathri

Updated on:

பல நாட்கள் கண்ட கனவு இன்று உண்மையாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் பல சூழ்நிலைகளை கடந்து பல போராட்டங்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக தனது முதல் மாநில அளவிலான மாநாட்டை தொடங்கியுள்ளது.

தவெக வின் தலைவரான விஜய் சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக விலகி இனி என்னுடைய பாதை இதுதான் என அரசியலில் நுழைந்த தற்பொழுது தன்னுடைய முதல் மாநாட்டை துவங்கி வைப்பதற்காக மேடைக்கு வந்துள்ளார்.

மேலும், இவர் மாநாட்டை துவங்கி வைக்கும் நோக்கோடு 100 அடி உயர கம்பத்தில் தனது கட்சி கொடியை பறக்க விடப் போகிறார். அதனைத் தொடர்ந்து ஊழல் தொடர்பான விஷயங்களையும் பேச இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேடைக்கு வந்த பொழுது அலை கடலென திரண்ட மக்கள் அனைவரும் சந்தோஷ கடலில் ஆர்ப்பரித்தனர்.

தன் மகனின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஜய் அவர்களின் தாயார் தந்தையாரும் இந்த மேடையில் பெருமையுடன் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். மாநாட்டு திடல் முழுவதும் தளபதி! தளபதி! என்ற கோஷம் பெரும் அலை போல் கேட்டுக் கொண்டிருக்கிறது.