அஜித் பிடிக்குமா ? விஜய் பிடிக்குமா ? வெளிப்படையாக கூறிய நடிகை த்ரிஷா !

0
170

தென்னிந்திய திரையுலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவருக்கு இன்றுவரை ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்து வருகிறது. இவரின் அழகினை கண்டு பலரும் பொறாமை கொள்ளும் விதமாக இந்த வயதிலும் அவர் அழகாகவும் இளமையாக இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு அந்த படத்தில் இவரது கதாபாத்திரமும், தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.Prestigious career to a lavish lifestyle and whopping net worth: Dive into  Trisha Krishnan's personal life | PINKVILLA

சமீபத்தில் திரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, இதில் த்ரிஷாவின் மாஸான வசனங்கள் ரசிகர்களிடையே கைதட்டலை பெற்றது, நயன்தாராவை போலவே ஐவரும் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான படங்களையே அதிகளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரிடம் ரசிகர்கள் உங்களுக்கு அஜித் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினர். அஜித் மற்றும் விஜய் இரண்டு பெருகும் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார், இவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Trisha Openly Talk About Vijay And Ajith - Gethu Cinema

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், இந்த இருவரில் யார் சிறந்தவர் என ஒருவரை தேர்வு செய்யமுடியாது, ஏனெனில் இருவருமே சிறந்த நடிகர்கள் மற்றும் இரண்டு நடிகர்களின் படங்களையுமே நான் ஒரு ரசிகையாக விரும்பி பார்ப்பேன் என்று தந்திரமாக பதிலளித்துள்ளார். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘ஏகே62’ படத்திலும் திரிஷா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

author avatar
Savitha