விஜய் வெளியே ..மகன் உள்ளே.. தமிழ் சினிமாவில் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

Photo of author

By Gayathri

நடிகர் விஜய் : விஜய் அவர்கள், “தமிழக வெற்றி கழகம்”, என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அதன் முதல் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார். இனி மக்களுக்காக அரசியலில் செயல்பட இருப்பதால், படங்களில் “இனி நடிக்க போவதில்லை” என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது “கடைசி படத்தில்” நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் விஜய்க்கு “69 வது படம்” ஆகும். இதை இயக்குனர் “எச் வினோத்” அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

விஜயின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மன வருத்தத்தை அளித்துள்ள நிலையில், அவர் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவரது மகன் “ஜேசன் சஞ்சய்” தமிழ் திரையுலகில் தனது காலடியை பதிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இவரின் முதல் படத்தின் அப்டேட் வெளியாகிவுள்ளது. இவர் நடிகராக இல்லாமல் “இயக்குனராக” கடந்த ஆண்டு “லைக்காவின்” தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகமாகியுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

பின் இவர் இயக்க இருந்த முதல் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், ஜேசன் சஞ்சய் அவர்களின் படம் கைவிடப்படவில்லை கண்டிப்பாக படப்பிடிப்பு நடக்கும் என்ற தகவல் வந்துள்ளது. நடிகர்களின் தேர்வில் பிசியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கதாநாயகனாக “துருவ் விக்ரம், விஜய் சேதுபதி, சூரி” என பல ஹீரோக்கள் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இவர்கள் யாரும் செட் ஆகவில்லை என்பதால், தற்போது “சந்தீப் கிஷன்” அவர்கள் “ஜேசன் சஞ்சய்” இயக்கும் முதல் படத்தில் நடிக்க இருப்பதை, நடிகர் “பாவா லக்ஷ்மணன்” உறுதிப்பட தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் இன்னும் கொடுக்கப்படவில்லை. இந்த படத்திற்காக ஜேசன் சஞ்சய் “1 வருடமாக” பொறுமையாக காத்திருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. கண்டிப்பாக இவர் தன் முதல் படத்திலேயே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.