விஜய் போஸ்டரே இனி ஓட்டக் கூடாது.. இது அவங்க போட்ட ஆர்டர்!! போலீசார் தடாலடி நடவடிக்கை!!

Photo of author

By Rupa

DMK TVK: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தவெக போஸ்டர்கள் ஒட்டக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிராக கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தனது கட்சி ரீதியான மாநாட்டை நடத்தி அதில் தனது எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலிருந்து திமுக சுதாரித்துக் கொண்டு பல தடங்கல்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொடர்ந்து அளித்து வருகிறது. கூட்டணி கட்சிகள் கையை விட்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காக எல்லோருக்குமான தலைவன் நிகழ்ச்சியில் திருமாவிற்கு அதிகளவு அழுத்தம் கொடுத்து கலந்து கொள்ள முடியாத நிலைமையை உண்டாக்கினர்.

இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வபோது திமுக தவெக இடையே மோதல் இருந்துதான் வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை பழவந்தாங்கல் பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி போஸ்டர் ஒட்டக்கூடாது எனக் கூறி இது குறித்து அறிவிப்பானது துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது பூதாகரமாக வெடித்ததோடு போஸ்டர் ஒட்டியவர்களை காவல்நிலையம் வரை அழைத்தும் சென்றுள்ளனர். இவ்வாறு செய்தது அதிகார மீறல் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக இவ்வாறான தங்களது பதவி அதிகாரத்தை தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருவதையே வழக்கமாக வைத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.