கொரோனா அச்சுறுத்தலை மீறி துருக்கியில் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட ஷூட்டிங்!! 

Photo of author

By Parthipan K

பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் சாதாரண துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனது இயல்பான நடிப்பினால் உயர்ந்துள்ளார்.

இவர் மற்றவரிடம் அணுகுமுறையே ரொம்ப எதார்த்தமாகவும் பிரம்மிப்பூட்டும் அளவிற்கு இருக்கும். அந்த குணத்தினால் தான் அவர் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது மிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்திலும் முக்கியமான கேரக்டரில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதமாக தடைபட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலை எல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் சேதுபதி தனது ஹிந்தி பட ஷூட்டிங்கை துருக்கியில் தொடங்கி இருக்கிறது.

துருக்கியில் நடைபெறும் படப்பிடிப்பு காட்சிகளை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் விஜய் சேதுபதி. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.