ஷாருக் கான் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!

0
86

ஷாருக் கான் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!

ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

அதன் பிறகு வரிசையாக விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ‘ஜவான்’ படத்தில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் 25 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த படத்தில் விஜய் ஒரு நாள் மட்டும் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தில் வில்லனாக நடிக்க இருந்த ராணா விலகிவிட்ட நிலையில் இப்போது விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.. இதற்காக அவருக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கதாநாயகனாக நடிக்கக் கூட அவர் அவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த தகவலை இப்போது விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே மும்பைகார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட இந்தி படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.