மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

0
191

மீண்டும் போலீஸாக விஜய் சேதுபதி… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “DSP”… மாஸ் ஆன போஸ்டர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றார்.

அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கதாநாயகனாக நடிக்கக் கூட அவர் அவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி நடித்து முடித்த படம் ஒன்று ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பொன் ராம் இயக்கி இருந்தார். பல மாதங்களாக கிடப்பில் இருந்த இந்த படத்தை இப்போது ரிலீஸ் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நேற்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்துக்கு DSP என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய படங்களை அடுத்து விஜய் சேதுபதி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.