விக்ரம் திரைப்படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! விஜய் சேதுபதிக்கு ஜோடியா?

0
86
Vijay sethupathi get pair in vikram movie
Vijay sethupathi get pair in vikram movie

விக்ரம் திரைப்படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்! விஜய் சேதுபதிக்கு ஜோடியா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில் நரேன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.இதனால் இந்த படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களான மாநகரம்,கைதி,மாஸ்டர் என அனைத்துத் திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன.

லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதில் கெட்டிக்காரர்.மேலும் வித்தியாசமானக் கதைகளை வைத்து படம் இயக்குபவர்.இவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பார்.இவரின் பவானி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.இவர் வில்லனாக நடிக்கிறாரா இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.ஆனாலும் இவரது தோற்றம் மற்றும் பர்ஸ்ட்லுக்கை வைத்துப் பார்க்கும்போது விஜய் சேதுபதி வில்லனாகவே நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தீவிர கமல் ரசிகர் ஆவார்.நடிகர் கமலை வைத்துப் படம் இயக்குவதை அவர் மிகவும் விரும்பி செய்கிறார் என்று பலமுறை தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நடிக்கவிருக்கிறார்.இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சமீபத்தில் வெளியான டீசரில் கமல்ஹாசனின் தோற்றம் மற்றும் பின்னணி இசை ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது.மேலும் 1986ம் ஆண்டு வெளிவந்த விக்ரம் படத்தின் இசையானது இதில் சேர்க்கபட்டிருந்தது.

இப்போது பிக்பாஸ் புகழ் ஷிவானி இந்த படத்தில் இணைந்துள்ளது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

author avatar
Parthipan K