அமீர்கான் படத்தில் விஜய்சேதுபதி! தெலுங்கு நடிகர் ஒப்பந்தம்!

0
149
Vijay Sethupathi in Aamir Khan movie! Telugu actor contract!
Vijay Sethupathi in Aamir Khan movie! Telugu actor contract!

 

அமீர்கான் படத்தில் விஜய்சேதுபதி! தெலுங்கு நடிகர் ஒப்பந்தம்!

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தைத் தொடர்ந்து “அமீர்கான் லால் சதா” என்னும் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தை அத்வைத் சந்தன் என்னும் இயக்குனர் தான் இயக்கிருக்கிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார், மேனா சிங் மற்றும் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இது 1999 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும்.

இந்தப் படத்தில் குறைந்த அளவில “ஐ க் யூ” உள்ளவர் என்ற கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். இதுவரை இப்படம் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால்
‘லடாக்’ என்னும் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்ட வருகிறது. படத்தில் இரண்டாவது உலகப் போர் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. அதில் சக போர் வீரனாக நடித்த தமிழ் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் படபிடிப்பு நடக்காததால் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் விலகிக் கொண்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதிக்கு பதிலாக நாக சைதன்யா என்னும் தெலுங்கு பட நடிகர் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சினிமா துறை தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleதங்கம் விலை சரிந்தது!! மகிழ்ச்சியில் மக்கள்!! வெள்ளி விலை நிலவரம்!!
Next articleதமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா?