விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!

0
76

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் மெர்ரி கிறிஸ்துமஸ்… ரிலீஸ் தள்ளிவைப்பு!

விஜய் சேதுபதி இப்போது தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் காத்ரினா கைஃபுடன் அவர் நடிக்கும் படமாக மெர்ரி கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றார்.

இந்த படத்தை அந்தாதூன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். காத்ரினா கைஃப் மற்றும் ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் மீது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படங்களே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் விஜய் சேதுபதி, அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கதாநாயகனாக நடிக்கக் கூட அவர் அவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.