அட நல்லா இருக்கே… விஜய் சேதுபதி- பொன்ராம் படத்தின் தலைப்பு இதுவா?

Photo of author

By Vinoth

அட நல்லா இருக்கே… விஜய் சேதுபதி- பொன்ராம் படத்தின் தலைப்பு இதுவா?

Vinoth

அட நல்லா இருக்கே… விஜய் சேதுபதி- பொன்ராம் படத்தின் தலைப்பு இதுவா?

விஜய் சேதுபதியை வைத்து பொன்ராம் இயக்கி முடித்துள்ள படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் இயக்கிய சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதனால் சிவகார்த்திகேயன் அவரைக் கழட்டிவிட்டார். இதையடுத்து இப்போது மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க விஜய் சேதுபதியோடு கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை விஜய் சேதுபதி 46 என அழைக்கப்படும் இந்த திரைப்படத்துக்கு ‘DSP’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.