விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

0
103

விஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!

விஜய் சேதுபதி தன்னுடைய 46 ஆவது படமாக பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இயக்குனர் பொன்ராமுக்கு மிகப்பெரிய பங்குண்டு. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர்.

நேரடியாக ஓடிடியில் ரிலீஸான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் அடுத்து உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பொன்ராம் இருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து அவர் பொன்ராம் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்ட தற்போது வரை விஜய் சேதுபதி 46 என அழைக்கப்படும் இந்த திரைப்படத்துக்கு ‘DSP’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது தலைப்பை மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தை நவம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இசை வெளியீடு மற்றும் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என தெரிகிறது.