வெற்றிமாறனிடம் டபுள் சம்பளம் கேட்கும் விஜய் சேதுபதி… பின்னணி என்ன?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்,வசனகர்த்தா என பல்துறை வித்தகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல், குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடம் மற்றும் கௌரவ வேடம் என்று கலக்கி வருபவர்.
தற்போது இந்திய சினிமாவிலேயே அதிக படங்களில் நடிக்கும் நடிகராக விஜய் சேதுபதி இருப்பார். அப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் படங்களில் விடுதலை திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவது முக்கியக் காரணம் ஆகும். முதலில் குறுகிய காலத்தில் எடுத்து ரிலீஸ் ஆகும் படமாகதான் இதை வெற்றிமாறன் ஆரம்பித்தார். ஆனால் ஷூட்டிங் பல நாட்கள் அதிகமாகி பட்ஜெட்டும் எகிறியது. இதனால் படத்தை கேஜிஎஃப் மற்றும் பாகுபலி போல இரண்டு பாகங்களாக் வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதனால் இன்னும் சில காட்சிகளைப் படமாக்க வேண்டும் என்பதால் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோரிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டுள்ளாராம். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி மீண்டும் கால்ஷீட் தரவேண்டும் என்றால் தனக்கு மேலும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கறாராகக் கூறிவிட்டாராம். ஏற்கனவே இந்த படத்துக்காக அதிக நாட்களை விஜய் சேதுபதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.