கொரோனா விதிமுறைகளை மீறிய விஜய்சேதுபதி ! ரசிகர்கள் கவலை !
இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும் இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இவரின் நடிப்பிற்கு அடிமை என்றும் சொல்லலாம். இந்நிலையில் தற்போது பல இடங்களில் இவரின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அதில் ஒன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துவரும் திரைப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படத்தின் கட்சிகள் படமாக்கப்பட்டு வந்தநிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி படம் எடுப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பத்திரிகையாளர்கள் அங்கு நடப்பதை புகைப்படம் எடுக்க முயன்றதால் தகராறு ஏற்ப்பட்டது.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விஜய் சேதுபதி வந்தார். அவர் செய்தியாளர்களை சமதானப்படுத்தியும் செய்தியாளர்கள் அதை ஏற்கவில்லை. இதைதத்தொடர்ந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் படபிடிப்பு நடத்தியதாக புகார் வந்தது . இதனால் படக்ககுழுவினர்களுக்குகிடையே சலசலப்பு ஏற்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஷூட்டிங் பாதியில் நிறுத்தபட்டது. விஜய்சேதுபதியின் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளார்கள்.