திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா??
தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடமாக தொடர்ந்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்கள் அமளுக்கு வந்துள்ளது. இதில் ஒன்றாக பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவற்றிர்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு மட்டும் தடை விலகி தளர்வு ஏற்பட்டு உள்ளது.
ஆனால் திரையரங்குகளுக்கு மட்டும் தடையை நீட்டித்துக் கொண்டே உள்ளது. இதனால் சினிமா துறை மிகவும் பின்னடைவை கண்டு வருகிறது. இதை தொடர்ந்து திரையரங்குகளில் எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸாக முடியாத
நிலையில், படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட சினிமா துறை முடிவு செய்தது. எதிர்பாராத வகையில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் பெரும் அளவில் ஆதரவு கொடுத்தனர். இதனால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படம் கூட ஓடிடி தளத்தில் தான் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் திரைப்படம் ஒன்று நேரடியாக காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் தற்போதும் ஓடிடி வெளியாகும் முன்பே நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் சன் தொலைக்காட்சியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று ஒலிபரப்பாகும் என தகவல் வந்துள்ளது. ஒலிபரப்பாகும் நேரத்தை இன்னும் சன் தொலைக்காட்சி வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்த படம் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.