குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

0
161

விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்  கா/பே ரணசிங்கம். இந்தப் படம் அக்டோபர்மாதம் இரண்டாம் தேதி OTT தளத்தில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சமீப காலத்தில் விஜய் சேதுபதி எந்த ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பில் வரும் படங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. கா/பே ரணசிங்கம் படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது இந்த படம் என்றே கூறலாம்.

மேலும் விஜய் சேதுபதியும் மிகவும் உற்சாகத்தில் இருந்தார்.இந்த நேரத்தில் தியேட்டரில் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானதால் இந்தப்படம் OTT தளத்திற்கு கை மாற்றப்பட்டது.

தற்போது கா/பே ரணசிங்கம் படத்தை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார் அப்படக்குழுவினர்.இந்நிலையில் ஜி5 பிளக்ஸ் என்ற OTT தளத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது இந்தப் படம்.

இந்தப் படத்தைப் பார்க்க ஒரு முறைக்கு ரூ 199 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் வரும் செலவை விட வீட்டில் டிவியில் படம் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் ரசிகர்கள் இந்த சலுகையை வரவேற்றுள்ளனர்.சிலர் இதை வரவேற்றாலும் பல விஜயசேதுபதியின் ரசிகர்கள் இதனை விரும்பவில்லை.

Previous articleகணவனின் கொடுமை தாங்காமல் திருமணம் செய்து பத்தே நாட்களில் போலீசில் புகார் கொடுத்த பிரபல நடிகை!
Next articleயாஷிகா உடன் டேட்டிங் செய்யும் மூத்த  நடிகரின் மகன் நடிகை!