மகள் திவ்யாவின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய் – மாஸ் வீடியோ வைரல்!

Photo of author

By Sakthi

மகள் திவ்யாவின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய் – மாஸ் வீடியோ வைரல்!

Sakthi

மகள் திவ்யாவின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய் – மாஸ் வீடியோ வைரல்!

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா ஒரு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.

தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘தளபதி 68’ படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும்  இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய்யின் மகள் திவ்யா சாஷா ஒரு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், நடிகர் விஜய் தன் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். அப்போது, நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்களுடன் திடீரென திவ்யா சூப்பராக நடனமாடினார். திவ்யாவின் நடனத்தை விஜய் பார்த்து பிரம்மித்துப் பார்த்து ரசித்துள்ளார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்களை இந்த வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.