ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

0
61

 

 

 

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த

 

தேர்வு மையத்தில் இந்தி பிராத்மிக் தேர்வு எழுத சென்றார். இங்கு, திருமணமான ஷபனா

 

அவரது இஸ்லாமிய வழக்கப்படி ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுதினார். தேர்வு தொடங்கிய 10 நிமிடங்கள் பிறகு, தேர்வு மைய கண்காணிப்பாளர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், உடனே ஹிஜாப் உடையை கழற்ற வேண்டுமென கடினமான தொனியில் கூறியதாக புகார் கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஷபனா தேர்வு எழுதாமல் வெளியேறியுள்ளார். வெளியே வந்தவுடன் ஷபனா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து தனக்கு நேர்ந்தவற்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்து உள்ளார். இது தொடர்பான ஷபினா அளித்த பேட்டி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில், தேர்வு மைய கண்காணிப்பாளரின் இந்த மோசமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.

 

 

சிறுபான்மை மக்களின் மதஉரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழாத வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஹிஜாப் உடையை அகற்ற வற்புறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துள்ளது.

 

 

இத்தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
Parthipan K