மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த தளபதி விஜய் புகைப்படம் காலையிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த போதிலும் விஜய் நேரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் ஒரு செயலை செய்து தமிழக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் எப்பொழுதும் போல ரசிகர்கள் கூட்டமாக கூடி அவரை காண திரண்டு விட்டனர்.
விஜய் திரும்பி செல்லும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் கூட்டத்தை ஒதுக்கும் போது ரசிகர் ஒருவரின் செருப்பு கூட்டத்தில் தவறி விழுந்து விட்டது. தளபதி விஜய் அந்த செருப்பை எடுத்து அவரிடம் கொடுத்து அனைவர் மனதையும் நெகிழச் செய்துள்ளார்.இதுவரை திரைத்துறையில் எந்த ஒரு நடிகரும் செய்யாத செயலை செய்து நடிகர் விஜய் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் விஜய்யை பிடிக்கும் வண்ணம் இச்செயல் உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/ThanthiTV/status/1309781846788431872?s=20