டிஆர்பி யில் முதலிடம் படித்து வரக்கூடிய சேனலாக விஜய் டிவி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்பொழுது முழுவதுமாக விஜய் டிவி கைமாற்றப்பட இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய 5 முக்கிய நிகழ்ச்சிகள் அதன் விளைவாக இப்பொழுது நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் jio நிறுவனம் வாங்கியதால் ஜியோ ஹாட்ஸ்டார் ஆக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து விஜய் டிவியையும் ஆகிவிட்டதாகவும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உடன் விஜய் டிவியும் இனிய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அதனை உண்மை என நிரூபிக்கும் விதமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்திவிட்டு விஜய் டிவியில் லோகோவை பற்றி புதிய நிகழ்ச்சிகள் மூலம் புதிய புத்தாக்கம் கொடுக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட இருப்பதாகவும் இதில் ஒளிபரப்பாகி வரக்கூடிய முக்கிய தொகுப்பாளர்களை முழுவதுமாக வெளியேற்ற இருப்பதாகவும் வெளியான தகவல் ரசிகர்களை பெரிதளவு அதிர்ச்சடைய செய்கிறது. தங்களுடைய ரியாலிட்டி ஷோக்களின் மூலமாகவும் சீரியல்களின் மூலமாகவும் இன்றுவரை டிஆர்பி யில் முதலிடம் பிடித்திருக்கக்கூடிய விஜய் டிவிக்கு ரசிகர் பட்டாலும் ஏராளம். ஆனால் இது போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டால் விஜய் டிவி ரசிகர்கள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது