பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுதியாக பணியாற்றி வரக்கூடிய பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை கண்ட தங்களுடைய கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
பிரியங்காவின் முதல் திருமணம் 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவர் உடன் நிகழ்ந்தது. ஆனால் இந்த உறவு நீடிக்காமல் 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பிரவீன் குமாரும் விஜய் டிவியில் வேலை பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் பிரிந்த நிலையில் தற்போது பிரியங்கா 2 ஆவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருமணம் மிகவும் எளிமையாகவே நடத்தப்பட்டிருக்கிறது. காரணம் இத்திருவனத்தில் பிரியங்காவின் குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மாப்பிள்ளை வசிய என்னுடைய குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மணமேடையில் மாப்பிள்ளை வசி அவர்கள் பிரியங்காவிற்கு தாலி கட்டிய பொழுது மிகவும் எமோஷனலான பிரியங்கா கண்ணீர் சிந்திய படி பார்க்க பிரியங்காவை ஆறுதல் படுத்த வசி அவர்கள் பிரியங்காவின் நெற்றியில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறி இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.