விஜய் டிவி சீரியல்களிலிருந்து அடுத்தடுத்து விலக இருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள்!

0
187
Vijay TV Serial characters quits serial next by next

பொது மக்களிடையே மற்ற சேனல் சீரியல்கள் விட விஜய் டிவி சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இதனால் தான் விஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதும் TRP அதிகமாகவே இருக்கும்.

விஜய் டிவி யில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது.

அதன் பிறகு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த சீரியல் தான் கவின் மற்றும் ரியோ என்னும் இளம் கதாநாயகர்களை கோலிவுட் க்கு கொடுத்தது.

அதே காலக்கட்டத்தில் வெளியானது தான் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல். மிர்ச்சி செந்தில் & ஸ்ரீஜா இந்த சீரியலில் நடித்திருந்தனர். இந்த சீரியலின் தொடக்க bgm மற்றும் காதல் காட்சிகள் இன்னும் பலரது வாட்சாப் ஸ்டேட்டஸில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி விஜய் டிவி சீரியல்களுக்கு என ஒரு பெரிய வரவேற்பு எப்போதும் மக்களிடையே உள்ளது, நாடகத்தில் ஜோடியாக சேர்ந்து நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்த ஜோடிகளும் உண்டு.

விஜய் டிவி யில் வாய்ப்பு கிடைக்காதா எனப் பலரும் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த சேனலின் சீரியல் பிரபலங்கள் பலர் தற்போது சீரியலை விட்டு அடுத்தடுத்து விலகி கொண்டிருக்கின்றனர்.

‘ பாரதி கண்ணம்மா’ ரோஷினி:

விஜய் டிவி யின் சீரியல் TRP ரேட்டில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். கணவன் மனைவிக்குள் இருந்த அழகான ,மாமியார் மருமகளின் புரிதல், பிள்ளைகளின் மீதான தாய் தகப்பனின் பாசம் என பல உணர்வுகளை ஒரு சேர காண்பிப்பது தான் ‘பாரதி கண்ணம்மா’. இதில் கண்ணம்மாவாக நடிப்பவர் தான் ரோஷினி. 27 வயதிலேயே இரண்டு 8 வயது பெண் பிள்ளைகளுக்கு தாயாக நடிப்பில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார். தற்போது இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதால் சீரியலில் இருந்து விலகுகிறார். இதே சீரியலில் வெண்பா கேரக்டரில் நடிக்கும் பரினா நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரும் சீரியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘பாண்டியன் ஸ்டார் ‘ காவியா :

பாண்டியன் ஸ்டார் சீரியல் சகோதர பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு சீரியல். எந்த ஒரு நெகடிவ் கதைக்களம் இல்லாமல் , முழுக்க முழுக்க அன்றாட நிகழ்வுகளை வைத்தே அமைக்கப்பட்ட காட்சிக்களம் இது. இந்த சீரியலில் ஏற்கனவே முல்லையாக நடித்த சித்ரா மறைந்து விட்ட காரணத்தால் காவ்யா முல்லையாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போது காவ்யாவும் இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறார். விக்னேஷ் சிவன் கவின் இணையும் ஊர்க்குருவி திரைப்படத்தில் காவ்யா கதாநாயகியாக நடிக்க இருப்பதே இதற்க்கு காரணம்.

3. ‘ராஜா ராணி’ ஆலியா :

ராஜா ராணி சீரியலில் அறிமுகமானவர் தான் ஆலியா மானசா, தனது துறுதுறுப்பான நடிப்பினால் டிக் டாக் விடியோக்கள் மூலமும் ரசிகர்களிடையே பிரபலமானவர் மானசா. அந்த சீரியலின் கதாநாயன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்லா என்னும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு ஆலியா தன்னுடைய எடையை குறைத்து முன்பை விட அழகாக ராஜா ராணி பார்ட் 2 வில் நடித்து வருகிறார். தற்போது ஆலியா கர்ப்பமாக இருப்பதாக அவருடைய கணவர் சஞ்சீவ் ரசிகர்களிடையே அறிவித்தார். ராஜா ராணி சீரியல் கதைப்படி நாயகி IPS ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவர், எனவே இது போன்ற கதாபாத்திரத்தில் கர்ப்பமாக இருக்கும் போது நடிப்பது என்பது முடியாத காரியம். இதனால் ஆலியா சீரியலில் இருந்து விலகக் கூடும்.

விஜய் டிவியில் மற்றுமொரு பிரபலமான சீரியல் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல். இதில் மாயனின் நண்பனாக நடித்தவர் ‘கத்தி’ கதாபாத்திரத்தில் வரும் ராஜு. கத்தி.- காயத்திரி ஜோடி ரசிகர்களிடையே பிரசித்தி பெற்ற ஜோடி. இதில் ராஜு க்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததால் சீரியலை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக செந்தூரப்பூவே என்னும் சீரியலும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous articleஷாருக்கான் திரைப்படத்திலிருந்து நயன்தாரா விலகலா.? இதுதான் காரணமா? அதிர்ச்சியில் அட்லி!!
Next articleபன்னீர்செல்வத்திற்கு கைகொடுக்கும் டிடிவி தினகரன்! அடுத்து நடக்கப்போவது என்ன?