TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
371
Vijay TV serial actress who did a bike ride with TTF Vasan! Viral video on the Internet!
Vijay TV serial actress who did a bike ride with TTF Vasan! Viral video on the Internet!

TTF வாசனுடன் பைக் ரைட் செய்த ராட்சசன் பட நடிகை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்கள் டிடிஎப் வாசன் மற்றும் ஜிபி முத்து. வழக்கமாக டிடிஎப் வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக அவருடைய யூடியூப் சேனலில் போடுவார்,அதுமட்டுமின்றி பைக்கில் வேகமாக செல்வது,ஸ்டண்ட் செய்வது,ரேஸ் செய்வது மற்றும் வழியில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு உதவி செய்வது போன்றவற்றை வீடியோவாக பதிவிட்டு வருகின்றார்.

மேலும் இவர் மீது சாலை விதிகளை மீறியது போன்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யூடியூபில் ஆக்டிவாக இருக்கும் ஜிபி முத்துவுடன் டிடிஎப் வாசன் பைக் ரைட் செய்துள்ளார்.அப்போது டிடிஎப் வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ வெளியானது.

அப்போது பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து அலறி கத்திய வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதனை தொடர்ந்து டிடிஎப் வாசன் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதுபோலவே தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் டிடிஎப் வாசனுடன் ரவீணா இருகின்றார்,இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.அதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ளார்.இந்நிலையில் டிடிஎப் வாசனுடன் பைக் ரைட் செய்துள்ளார்.

டிடிஎப் வாசன்  அதிவேகத்தில் சென்றுள்ளார்.அப்போது ரவிணா பின் இருக்கையில் இருந்து அலறிய  வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.

Previous articleதமிழ் சினிமாவில் இவர்தான் நம்பர் ஒன் நடிகர்! அப்போது இரண்டாவது இடம் யாருக்கு?
Next articleசுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!