வாரிசு முதல் சிங்கிள் எப்பதான் ரிலீஸ் ஆகும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
227

வாரிசு முதல் சிங்கிள் எப்பதான் ரிலீஸ் ஆகும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். படத்தில் விஜய்யோடு மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் படம் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது அடுத்த வாரத்தில் அந்த பாடல் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னும் சரியான தேதி முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வரும் வேளையில் இந்த மாத இறுதிக்குள் மொத்த படமும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறத். வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் உரிமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் 7ஸ்க்ரீன்ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித்குமார் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தவர். அடுத்து உருவாக உள்ள தளபதி 67 படத்தினையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமழையால் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் பாதிப்பு… மூன்று மாதங்கள் ரெஸ்ட்!
Next articleநயன்தாரா வாடகைத் தாய் விவகாரம்…. யார் மேல் தவறு… வெளியான பரபரப்பு அறிக்கை!