விஜய்யின் வாரிசு படம் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

0
256

விஜய்யின் வாரிசு படம் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மாற்றி மாற்றி நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு குறுகிய பிரேக் எடுத்துக் கொண்டு விஜய் உடனடியாக லோகேஷ் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் தன் குழுவினரோடு விஜய்யை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைராலாகி  வருகிறது.  லோகேஷ் படத்தில் விஜய்க்கு மொத்தம் 6 வில்லன்கள் என்று சொல்லப்படுகிறது. அது சம்மந்தமாக பல யூகங்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Previous articleபட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?
Next articleதிருவண்ணாமலையில் கோவில் கலசங்கள் திருட்டு! அதிர்ச்சியில் பக்தர்கள்!